முந்திரி தோப்பில் தீ விபத்து
சீர்காழி அருகே முந்திரி தோப்பில் தீ விபத்து
மயிலாடுதுறை
சீர்காழி:
சீர்காழி அருகே திருமுல்லைவாசல் ஊராட்சிக்குட்பட்ட தொடுவாய் கிராமத்தை சேர்ந்தவர் கலைவாணி. இவருக்கு சொந்தமான 4 ஏக்கர் முந்திரி தோப்பு அதே கிராமத்தில் உள்ளது. இதேபோல் பழையாறு கிராமத்தை சேர்ந்த வைத்தியலிங்கம் என்பவருக்கு சொந்தமான 5 ஏக்கர் முந்திரி தோப்பும் தொடுவாய் கிராமத்தில் உள்ளது. இந்த நிலையில் இவர்கள் இரண்டு பேரின் முந்திரி தோப்பிலும் நேற்று முன்தினம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் அவர்களது முந்திரி தோப்பு முற்றிலும் எரிந்து நாசமானது. இது குறித்து தகவல் அறிந்த சீர்காழி மற்றும் பூம்புகார் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து முந்திரி தோப்பில் பற்றிய தீ மேலும் பரவாமல் இருக்கும் வகையில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story