குடோனில் தீ விபத்து
சாத்தூர் அருகே குடோனில் தீ விபத்து ஏற்பட்டது.
விருதுநகர்
சாத்தூர்,
சாத்தூர் தாலுகா சடையம்பட்டியை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 53). இவர் அப் பகுதியில் பிளாஸ்டிக் கவர் கம்பெனி நடத்தி வருகிறார். இந்த கம்பெனியில் பழைய பிளாஸ்டிக் கவர் வாங்கி விற்பனை செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பிளாஸ்டிக் கவர் குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து 1 மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பல்லாயிரக்கணக்கான மதிப்புள்ள பிளாஸ்டிக்கவர்கள் எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது. இந்த தீவிபத்தில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறிய சரக்கு வாகனத்தின் முன் பகுதி முழுவதும் தீயில் எரிந்து சேதமானது. இந்த தீவிபத்து குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story