ஆற்றில் தவறி விழுந்த மீனவர் பிணமாக மீட்பு


ஆற்றில் தவறி விழுந்த மீனவர் பிணமாக மீட்பு
x

ஆற்றில் தவறி விழுந்த மீனவர் பிணமாக மீட்பு

கன்னியாகுமரி

கொல்லங்கோடு:

நித்திரவிளை அருகே ஆற்றில் தவறி விழுந்த மீனவர் பிணமாக மீட்கப்பட்டார்.

இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

மீனவர்

நித்திரவிளை அருகே தூத்தூர் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் குமார் (வயது 52). இவருக்கு சொந்தமான விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதியில் ஏற்பட்ட பருவநிலை மாற்றம் காரணமாக கடந்த சில நாட்களாக மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் அந்த படகுகள் இரையுமன்துறை ஆற்றின் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்த படகுகளில் புதுச்சேரி பனிதிட்டு பகுதியை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் (வயது 27) உள்பட 5 பேர் மற்றும் வடமாநிலத்தை சேர்ந்த 3 பேர் என 8 பேர் தங்கியிருந்தனர்.

இந்தநிலையில் முத்துகிருஷ்ணன் கடந்த 17-ந் தேதி இயற்கை உபாதை கழிக்க சென்றபோது படகில் இருந்து தவறி எதிர்பாராதவிதமாக ஆற்றில் விழுந்துள்ளார்.

ஆற்றில் பிணமாக மீட்பு

இதனை அருகில் கட்டப்பட்டிருந்த படகுகளில் இருந்த சக தொழிலாளர்கள் பார்த்து சத்தம் போட்டனர். பின்னர் ஆற்றில் மூழ்கிய அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால் முத்துகிருஷ்ணனை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுதொடர்பாக நித்திரவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் ஆற்றில் விழுந்து மாயமான முத்துகிருஷ்ணனின் உடல் நேற்று காலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளுக்கு இடையே இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆற்றில் மூழ்கி மீனவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story