மீன்பிடிக்கச் சென்ற மீனவர் கடலில் தவறி விழுந்து சாவு


மீன்பிடிக்கச் சென்ற மீனவர்   கடலில் தவறி விழுந்து சாவு
x
தினத்தந்தி 23 Sep 2022 6:45 PM GMT (Updated: 2022-09-24T00:15:19+05:30)

புன்னக்காயல் பகுதிில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் கடலில் தவறி விழுந்து பரிதாபமாக இறந்து போனார்.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

புன்னக்காயல் பகுதியில் மீன்பிடிக்க சென்ற மீனவர் கடலில் தவறி விழுந்து பரிதாபமாக பலியானார்.

மீனவர்

ஆத்தூர் அருகே உள்ள புன்னக்காயல் மீனவ காலனி பகுதியைச் சேர்ந்த ரத்தினம் மகன் வால்ட்டர் (வயது 55). மீனவர். இவருக்கு மனைவி மற்றும் 3 மகள்கள் உள்ளனர். கடந்த 22-ந்தேதி வழக்கம் போல மாலையில் கடலில் மீன் பிடிப்பதற்காக கட்டுமரத்தில் சகமீனவர்களுடன் கடலுக்கு சென்றுள்ளார்.

கடலில் தவறி விழுந்து சாவு

புன்னக்காயல் கடற்கரையில் இருந்து கடலுக்குள் செல்லும் போது, ஆறும், கடலும் சந்திக்கும் இடமான முகத்துவாரத்தில் படகிலிருந்து எதிர்பாராத விதமாக வால்ட்டர் தவறி கடலில் விழுந்துள்ளார். உடனடியாக படகில் இருந்த சக மீனவர்கள் கடலில் குதித்து அவரை தேடினர். சிறிது நேரத்தில் கடல் தண்ணீரில் மூழ்கி இருந்த அவரை மயங்கிய நிலையில் மீட்டனர். உடனடியாக அவர்கள் ஆத்தூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த தருவைகுளம் கடலோர காவல்படை ேபாலீசார் அங்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் இதுதொடர்பாக தருவைகுளம் கடலோர காவல்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாணை நடத்தி வருகின்றனர்.


Next Story