கலவையில் வெள்ளப் பேரிடர் மீட்பு ஒத்திகை
கலவையில் வெள்ளப் பேரிடர் மீட்பு ஒத்திகை நடந்தது.
கலவை
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை பேரூராட்சியில் நல்ல தண்ணீர் குளத்தில்் பேரிடர் மீட்பு ஒத்திகை துணை கலெக்டர் சத்திய பிரதாப் தலைமையில் நடைபெற்றது.
இதில் பொதுமக்கள் மழை வெள்ளத்தில் சிக்கிக்கொண்டால் அவர்களை எவ்வாறு காப்பாற்றுவது, முதலுதவி சிகிச்சை அளிப்பது மருத்துவ மனைக்கு அனுப்பி வைப்பது குறித்து,
மாடி வீட்டில் ஏற்படும் தீ விபத்தில் சிக்கிக்கொள்பவர்களை எவ்வாறு மீட்பது என்பது குறித்தும், ஆடு, மாடுகள் தண்ணீரில் சிக்கிக்கொண்டால் அவற்றை எவ்வாறு காப்பாற்றுவது என்பது குறித்தும் தீயணைப்புத் துறையினர் செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.
இந்தநிகழ்ச்சியில் கலவை தாசில்தார் சமீம், மாவட்ட சுகாதாரதுணை இயக்குனர் மணிவண்ணன், துணை தாசிலார்கள் இளையராஜா, சத்தியா, திமிரி வட்டார மருத்துவர்கள் பூபாலன் மாதேஷ், கால்நடை மருத்துவர், தீயணைப்பு அலுவலர் விநாயகம், கலவை பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேசன்,
திமிரி வட்டார ஊராட்சி அலுவலர் சையத் நவாஸ், கலவை பேரூராட்சி தலைவர் கலா சதீஷ், துணைத் தலைவர் நீலாவதி தண்டபாணி, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், வருவாய் ஆய்வாளர் வீரராகவன் சுகாதார மேற்பார்வையாளர்கள் பழனி, மணி, சொக்கலிங்கம் கிராம அதிகாரிகள் ஸ்ரீதர். வினோத் கிராம உதவியாளர்கள் பேரூராட்சி மன்ற ஊழியர்கள், போக்குவரத்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.