உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூரில் திறக்கப்பட்ட தியாகிகள் நினைவு மண்டபத்தில் மலர் தூவி மரியாதை


உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூரில் திறக்கப்பட்ட தியாகிகள் நினைவு மண்டபத்தில் மலர் தூவி மரியாதை
x

உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூரில் திறக்கப்பட்ட தியாகிகள் நினைவு மண்டபத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது

மதுரை

உசிலம்பட்டி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பெருங்காமநல்லூரில் 1920-ம் ஆண்டு கைரேகை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய ஒரு பெண் உள்பட 16 பேர் ஆங்கிலேயரால் சுட்டு கொல்லப்பட்டனர்.

இந்த தியாகிகளின் நினைவாக மணிமண்டபம் அமைக்க பல ஆண்டுகளாக கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் சுமார் ரூ.1 கோடியே 47 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் மணிமண்டபம் கட்டும்பணிகள் நடைபெற்று முடிவுற்றது.

இந்த தியாகிகளின் நினைவு மணிமண்டபத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து பெருங்காமநல்லூரில் நடந்த விழாவில் மதுரை மாவட்ட கலெக்டர் அனிஷ் சேகர், மாநகராட்சி மேயர் இந்திராணி, உசிலம்பட்டி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அய்யப்பன் உள்பட பலர் கலந்து கொண்டு நினைவு மண்டப தூணுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதில் சேடபட்டி ஒன்றிய செயலாளர் ஜெயச்சந்திரன், ஒன்றிய துணைச் செயலாளர் சேடபட்டி ராஜேந்திரன், அரசு வழக்கறிஞர் ராஜசேகர், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஜெயராமன், பேரையூர் பேரூராட்சி தலைவர் கே.கே. குருசாமி, மாவட்ட கவுன்சிலர் திசைகரன், ஆர்.டி.ஓ., பேரையூர் தாசில்தார் ரவிச்சந்திரன் மற்றும் அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதைதொடர்ந்து கலெக்டர், மேயர், எம்.எல்.ஏ. ஆகியோர் மணிமண்டப வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர்.

அதன் பின்னர் சேடபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பெரிய கட்டளையில் கட்டப்பட்டு வரும் சமுதாய கூடத்தையும், செம்பரனில் கட்டப்பட்டு வரும் நியாய விலை கடையையும் மற்றும் வளர்ச்சித் திட்ட பணிகளையும் மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.


Next Story