முதல்-அமைச்சர் விழாவில் பரபரப்பு மின் விளக்கு தூண் சரிந்து விழுந்தது


முதல்-அமைச்சர் விழாவில் பரபரப்பு  மின் விளக்கு தூண் சரிந்து விழுந்தது
x

முதல்-அமைச்சர் விழாவில் மின் விளக்கு தூண் சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு

கோபி அருகே உள்ள கள்ளிப்பட்டியில் நடந்த முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதி சிலை திறப்பு விழாவை காணுவதற்காக ஏராளமான மக்கள் கூடியிருந்தனர். அங்கு மின் விளக்கு தூண்கள் அமைக்கப்பட்டு இருந்தது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருவதற்கு முன்பு பொதுமக்கள் காத்திருந்தனர். அப்போது அங்கு காற்று பலமாக வீசியதால் மின்விளக்கு தூண் திடீரென சாய்ந்து விழுந்தது. அருகில் உள்ள ஒரு கோவிலின் மீது விழுந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story