பக்தி பாடலுக்கு மெய் மறந்து நடனமாடிய வெளிநாட்டு பெண்


பக்தி பாடலுக்கு மெய் மறந்து நடனமாடிய வெளிநாட்டு பெண்
x

அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தி பாடலுக்கு வெளிநாட்டு பெண் மெய் மறந்து நடனமாடினார்.

திருவண்ணாமலை

துருக்கி நாட்டை சேர்ந்த செமி மற்றும் அவரது மனைவி மெர்வி இந்தியாவுக்கு 3 மாத சுற்றுலா விசாவில் வந்துள்ளனர். இவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவண்ணாமலைக்கு வந்தனர்.

பின்னர் அவர்கள் கிரிவலப்பாதையில் உள்ள ரமணாசிரமம், யோகி ராம் சுரத்குமார் ஆசிரமம் உள்ளிட்ட ஆசிரமங்களை நேரில் சென்று பார்த்து உள்ளனர்.

இன்று அவர்கள் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக வந்தனர்.

சாமி தரிசனம் செய்துவிட்டு கோவிலின் 3-ம் பிரகாரத்தில் உள்ள கொடிமரம் முன்பு சிவன் பாடலுக்கு மெர்வி பக்தி பரவசத்துடன் நடனம் ஆடினார்.

அதனை அவரது கணவர் வீடியோ எடுத்தார்.

அப்போது நடனமாடிய மெர்வி கோவில் சார்பில் வழங்கப்பட்ட மலர்மாலையை கழுத்தில் அணிந்தபடியும், மாலையை பக்தி பரவசத்தில் தூக்கி வீசியபடியும் தன்னை மெய் மறந்து நடனமாடியது காண்போரை பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது.

அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் வெளிநாட்டை சேர்ந்த பெண் நடனமாடுவதை ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர்.

அதுமட்டுமின்றி நடனமாடிய அந்த பெண்ணுடன் ஆன்மிக பக்தர்கள் பலர் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

வெளிநாட்டு பெண் நடனமாடிய நிகழ்வு கோவிலில் சிறிது பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story