பேரூராட்சி அலுவலகத்துக்கு வந்த முன்னாள் கவுன்சிலர்


விஷம் வைத்து கொல்லப்பட்ட நாய்குட்டியுடன் நீடாமங்கலம் பேரூராட்சி அலுவலகத்துக்கு முன்னாள் கவுன்சிலர் வந்து பன்றிகளை பிடிக்க நடவடிக்ைக எடுக்க கோரிக்கை விடுத்தார்.

திருவாரூர்

நீடாமங்கலம்:

விஷம் வைத்து கொல்லப்பட்ட நாய்குட்டியுடன் நீடாமங்கலம் பேரூராட்சி அலுவலகத்துக்கு முன்னாள் கவுன்சிலர் வந்து பன்றிகளை பிடிக்க நடவடிக்ைக எடுக்க கோரிக்கை விடுத்தார்.

முன்னாள் கவுன்சிலர்

நீடாமங்கலம் சுண்ணாம்பு காலவாய் தெருவில் வசித்து வருபவர் வீரமணி. இவர் பேரூராட்சியின் முன்னாள் கவுன்சிலர்.இவர் தனது வீட்டில் நாய்க்குட்டிகளை வளர்த்து வந்தார்.

நாய்க்குட்டிகளுக்கு நேற்று முன்தினம் மாலை மர்ம நபர்கள் விஷம் வைத்துள்ளனர். இதனால் உயிருக்கு போராடிய நாய்குட்டுகளுக்கு வீரமணி மருத்துவ சிகிச்சை அளித்துள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி ஒரு நாய்க்குட்டி இறந்து விட்டது. மற்ற 2 நாய்குட்டிகளும் உயிருக்கு போராடி கொண்டிருந்தன.

இறந்த நாய்க்குட்டியுடன் வந்தார்

இதை பார்த்து ஆத்திரம் அடைந்த முன்னாள் கவுன்சிலர் வீரமணி, விஷம் வைத்து கொல்லப்பட்ட நாய்க்குட்டி மற்றும் உயிருக்கு போராடிய நாய்க்குட்டிகளை பேரூராட்சி அலுவலகத்திற்கு நேற்று காலை கொண்டு வந்தார்.

பின்னர் அவற்றை நுழைவு வாசலில் வைத்தார். அப்போது அங்கு வந்த பேரூராட்சி நிர்வாக அதிகாரி கங்காதரன், அவரிடம் கேட்டறிந்தனர்.

அப்போது வீரமணி கூறியதாவது:-

பன்றிகளை பிடிக்க வேண்டும்

பன்றிகள் வளர்ப்பவர்கள் தான் எனது நாய்க்குட்டிகளுக்கு விஷம் வைக்கிறார்கள். ஏற்கனவே இரண்டு நாய்க்குட்டிகளை விஷம் வைத்து கொன்றுள்ளனர். .இப்போது மூன்று நாய்க்குட்டிகளுக்கும் விஷம் வைத்துள்ளனர். எனவே பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். அதற்கு பேரூராட்சி நிர்வாக அதிகாரியும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதனையடுத்து நாய்க்குட்டிகளுடன் வீரமணி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

பரபரப்பு

இந்த சம்பவத்தால் பேரூராட்சி அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து மேலும் 2 நாய்க்குட்டிகளும் பரிதாபமாக இறந்தன.


Next Story