கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; விவசாயி பலி


கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; விவசாயி பலி
x
தினத்தந்தி 29 March 2023 2:00 AM IST (Updated: 29 March 2023 2:01 AM IST)
t-max-icont-min-icon

சின்னாளப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் விவசாயி பலியானார்

திண்டுக்கல்

சின்னாளப்பட்டி அருகே உள்ள வெள்ளோட்டை சேர்ந்தவர் செல்லத்துரை (வயது 60). விவசாயி. நேற்று இவர், கொடைரோடு அருகே உள்ள காமலாபுரத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையில் காமலாபுரம் பிரிவு அருகில் வந்ததும், அவர் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று, மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில், மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கிவீசப்பட்ட செல்லத்துரை படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story