தூக்கத்தில் காலை போட்ட நண்பன்: தலையில் கல்லை போட்டு கொன்ற கொடூரம்


தூக்கத்தில் காலை போட்ட நண்பன்: தலையில் கல்லை போட்டு கொன்ற கொடூரம்
x

செங்கல்பட்டில் தூக்கத்தில் காலை போட்ட நபரை, அவரது நண்பர் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு பகுதியில் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வந்த பார்த்திபன் என்பவர், தனது நண்பரான ரஹ்மான் ஷெரிப் என்பவரது வீட்டில், மது அருந்தி விட்டு உறங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார். அதேபோல் சில நாட்களுக்கு முன்னர் உறங்கிய பார்த்திபன், தலையில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக, பார்த்திபனுடன் உறங்கும் அவரது நண்பரான பிரபாகரனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் சம்பவத்தன்று இருவரும் மதுபோதையில் உறங்கியதும், அப்போது பார்த்திபன் பிரபாகரன் மீது காலை போட்டதும் தெரியவந்தது.

இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், பிரபாகரன் பார்த்திபன் தலையில் கல்லை போட்டு கொன்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து பிரபாகரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story