குளத்தின் கரையை உடைத்து தண்ணீரை வெளியேற்றும் மணல் கடத்தல் கும்பல்


குளத்தின் கரையை உடைத்து தண்ணீரை வெளியேற்றும் மணல் கடத்தல் கும்பல்
x

குளத்தின் கரையை உடைத்து தண்ணீரை வெளியேற்றும் மணல் கடத்தல் கும்பல்

கன்னியாகுமரி

திருவட்டார்:

ஆற்றூர் குட்டக்குழி சாலையில் இசக்கி அம்மன் கோவில் எதிரில் உள்ளது தொழிச்சல் ஈயான் குளம். இந்த குளத்தில் தண்ணீர் அதிகமாக தேங்கியுள்ளது.

இந்தநிலையில் குளத்தையொட்டியுள்ள பகுதியில் இருந்து மண் எடுக்க ஒரு கும்பல் திட்டமிட்டு ஓடைக்கும், குளத்துக்கும் இடையே உள்ள பகுதியில் உடைப்பை ஏற்படுத்தி தண்ணீரை வெளியேற்ற முயற்சித்தது.

இதுபற்றி தகவல் அறிந்த அந்த பகுதி பொதுமக்கள் விரைந்து வந்து மண்போட்டு உடைக்கப்பட்ட பகுதியை மூடினர். இந்தநிலையில் நேற்று மீண்டும் குளக்கரையை உடைத்து சிலர் தண்ணீரை வெளியேற்றினர்.

இதுதொடர்பாக திருவட்டார் தாசில்தார் தாஸிடம் கேட்ட போது கூறுகையில், பொதுமக்களிடம் இருந்து வந்த புகாரை தொடர்ந்து சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்தோம். பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள் என்றார்.

செருப்பாலூர் பொதுப்பணித்துறை என்ஜினீயர் வைஷ்ணவி கூறுகையில், குளத்துக்கு நீர் வராமல் தடுப்பதும், குளக்கரையை உடைப்பதும் சமூக விரோத செயல். தற்போது முறையாக தண்ணீர் தேங்கியுள்ள நிலையில் குளத்தின் கரையை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு புகார் தெரிவித்துள்ளோம். அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்றார்.


Next Story