மோட்டார் சைக்கிளை திருடி சுடுகாட்டில் தீ வைத்து எரித்த கும்பல்


மோட்டார் சைக்கிளை திருடி    சுடுகாட்டில் தீ வைத்து எரித்த கும்பல்
x
தினத்தந்தி 20 Nov 2022 12:15 AM IST (Updated: 20 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரி அருகே மோட்டார் சைக்கிளை திருடிய கும்பல் அதனை சுடுகாட்டில் தீ வைத்து எரித்த தகவல் அம்பலமாகி உள்ளது. இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி அருகே மோட்டார் சைக்கிளை திருடிய கும்பல் அதனை சுடுகாட்டில் தீ வைத்து எரித்த தகவல் அம்பலமாகி உள்ளது. இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மோட்டார் சைக்கிள்

கன்னியாகுமரியை அடுத்த பரமார்த்தலிங்கபுரம் காமராஜர் காலனியைச் சேர்ந்தவர் சுதாகர். டெம்போ டிரைவரான இவர் குடிநீர் கேன் சப்ளை செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சுதாகர் நேதாஜி காலனி பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது திடீரென பழுதாகி விட்டது.

இதனால் அவர் வாகனத்தை அங்கேயே நிறுத்தி விட்டு வீட்டுக்கு சென்றார். மறுநாள் காலையில் வந்து பார்த்த போது வாகனத்தை காணவில்லை.

சுடுகாட்டில் எரித்த கும்பல்

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அந்த பகுதியில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இந்தநிலையில் சுடுகாட்டில் மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் கிடப்பதாக சுதாகருக்கு தகவல் கிடைத்தது.

உடனே அவர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்ட போது தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிள் தான் என்பதை அறிந்து கொண்டார்.

பின்னர் இதுகுறித்து சுதாகர் கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். உடனே இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையிலான போலீசார் விசாரணை களத்தில் இறங்கினர்.

சுதாகர் மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்த பகுதியில் உள்ள ஒரு கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது அதில் 7 பேர் கொண்ட கும்பல் மோட்டார் சைக்கிளை திருடி சென்று சுடுகாட்டில் தீ வைத்து எரித்தது அம்பலமானது. சுதாகருடன் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அவருடைய மோட்டார் சைக்கிளுக்கு கும்பல் தீ வைத்தது தெரியவந்தது.

4 பேர் கைது

இதனையடுத்து 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நேதாஜி காலனியை சேர்ந்த வசந்தகுமார், அழகர், வசந்த், சுரேஷ் ஆகிய 4 பேரை கைது செய்தனர். மற்ற 3 பேரை தேடிவருகின்றனர்.


Next Story