நாய் கடித்த காயத்துடன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த சிறுமி


நாய் கடித்த காயத்துடன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த சிறுமி
x

நாய் கடித்த காயத்துடன் போலீஸ் நிலையத்தில் புகார் சிறுமி அளித்தாள்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை

நாய் கடித்த காயத்துடன் போலீஸ் நிலையத்தில் புகார் சிறுமி அளித்தாள்.

ஜோலார்பேட்டையில் நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. வக்கணம்பட்டி பகுதியைச் சேர்ந்த சிவகுமார் மகள் இலக்கியா (வயது 7) நேற்று பள்ளிக்கு சென்று விட்டு பெற்றோருடன் சந்தைக்கோடியூர் பகுதியில் உள்ள கடைக்கு சென்று கொண்டிருந்தாள். அப்போது அந்த பகுதியில் திரிந்து கொண்டிருந்த நாய், மாணவியின் கையை கடித்தது.

இதனையடுத்து இலக்கியாவை சந்தைக்கோடியூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்துச்சென்று சிகிச்சை பெற வைத்தனர். பின்னர்நாய் கடித்த காயத்துடன் இலக்கியாவை பெற்றோர் ஜோலார்பேட்டை போலீ்ஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். நாய்களை பிடித்து அப்புறப்படுத்தக்கோரி அவர்கள் புகார் அளிக்கப்பட்டது.

இதேபோல் சந்தைக்கோடியூர் பகுதியை சேர்ந்த பஜனை கோவில் தெருவில் வசித்து வருபவருக்கு சொந்தமான நாய் அவ்வழியாக சென்ற சக்கரவர்த்தி என்பவரது மகன் வெங்கடேசனை கடித்தது.

இது குறித்த புகாரின்பேரில் ஜோலார்பேட்டை நகராட்சி ஆணையாளருக்கு ஜோலார்பேட்டை போலீசார் உடனடியாக நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க கோரி தகவல் தெரிவித்தனர் அதன்பேரில் ஜோலார்பேட்டை நகராட்சி ஆணையாளர் பழனி, நாய்களை பிடிக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி விரைவில் நாய்கள் பிடிக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.


Next Story