சளி மருந்து குடித்த சிறுமி திடீர் சாவு
திருச்சி அருகே மருந்துகடையில் வாங்கிய சளி மருந்து குடித்த 4 வயது சிறுமி திடீரென இறந்தது.
திருச்சி அருகே மருந்துகடையில் வாங்கிய சளி மருந்து குடித்த 4 வயது சிறுமி திடீரென இறந்தது.
சளி, இருமல்
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரத்தை அடுத்துள்ள கொப்பம்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார். டிரைவர். இவரது மகள் துர்காஸ்ரீ(வயது 4). இவருக்கு கடந்த சில நாட்களாக சளி, இருமல் இருந்துள்ளது. இதையடுத்து அவரது தாய் சங்கீதா, குழந்தை துர்காஸ்ரீயை கொப்பம்பட்டியில் உள்ள ஒரு தனியார் மருந்து கடைக்கு அழைத்து சென்று அங்கு மருந்து வாங்கி கொடுத்ததாக தெரிகிறது.
இதையடுத்து, மருந்தை குடித்த அன்று இரவு குழந்தை துர்காஸ்ரீக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு வீட்டிலேயே உயிரிழந்துள்ளது. இதையடுத்து சங்கீதா தனது உறவினர்களுடன் சம்பந்தப்பட்ட மருந்து கடை உரிமையாளரின் வீட்டிற்கு சென்று நியாயம் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பேச்சுவார்த்தை
இது குறித்து தகவல் அறிந்த உப்பிலியபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.