பாட்டு பாடி தேயிலை பறிக்கும் பெண்


பாட்டு பாடி தேயிலை பறிக்கும் பெண்
x

பாட்டு பாடி தேயிலை பறிக்கும் பெண் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நீலகிரி

கோத்தகிரி,

கோத்தகிரி அருகே கோயில் மேடு பகுதியை சேர்ந்தவர் ரெஜினா லூகாஸ். தோட்ட தொழிலாளி. இசையில் அதிக ஆர்வம் கொண்ட ரெஜினா லூகாஸ் தேயிலை பறிக்கும் போது, சோர்வடையாமல் இருப்பதற்காக தனது இனிமையான குரல் வளத்துடன் பாட்டு பாடுவதை வழக்கமாக கொண்டு உள்ளார். அதனை மற்ற தொழிலாளர்களும் உற்சாகமாக கேட்பார்கள். தற்போது அவர் சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து என்ற திரைப்பட பாடலை பாடி பச்சை தேயிலையை பறித்தார். இந்த சமூக வலைத்தளத்தில் வீடியோ வைரலாகி வருகிறது. கவலைகள் நிறைந்து இருந்தாலும், தேயிலை தோட்டங்களில் இலை பறித்து வாழும்‌ தொழிலாளர்களின் கொண்டாட்டம் ஒரு பகுதியாக உள்ளது என பலர் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.


Next Story