கிணற்றில் தவறி விழுந்த ஆடு உயிருடன் மீட்பு


கிணற்றில் தவறி விழுந்த ஆடு உயிருடன் மீட்பு
x
தினத்தந்தி 5 April 2023 12:15 AM IST (Updated: 5 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவில் அருகே கிணற்றில் தவறி விழுந்த ஆடு உயிருடன் மீட்கப்பட்டது.

தென்காசி

சங்கரன்கோவில்:

கயத்தாறு அருகே உள்ள அரசன்குளத்தைச் சேர்ந்த ராஜா மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான ஆடுகள் சங்கரன்கோவில் அருகே சின்னகோவிலாங்குளம் பகுதியில் மேய்ச்சலுக்கு விடப்பட்டு இருந்தன. அப்போது ஒரு ஆடு அங்குள்ள தரைமட்ட கிணற்றில் தவறி விழுந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் சங்கரன்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலர் விஜயன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று, கிணற்றில் தத்தளித்த ஆட்டை வலை மூலம் உயிருடன் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.


Next Story