வீட்டின் 2-வது மாடி 'சன்ஷேடில்' சிக்கி தவித்த ஆடு


வீட்டின் 2-வது மாடி சன்ஷேடில் சிக்கி தவித்த ஆடு
x

நாகையில் வீட்டின் 2-வது மாடி சன்ஷேடில் சிக்கி தவித்த ஆட்டைதீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

நாகப்பட்டினம்

நாகை நாடார் தெரு பகுதியில் நேற்று ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. அதில் ஒரு ஆடு அங்குள்ள ரத்தின பாண்டியன் என்பவரின் அடுக்கு மாடி வீட்டுக்கு படி வழியாக மேலே ஏறி 2-வது மாடிக்கு சென்றது. பின்னர் அந்த ஆடுக்கு கீழே இறங்க வழி தெரியாததால் அங்கிருந்து கீழே குதித்துள்ளது. அப்போது அந்த ஆடு அதிர்ஷ்டவசமாக மாடியில் உள்ள 'சன்ஷேடில்' விழுந்து கீழே இறங்க முடியாமல் தவித்து கொண்டிருந்தது. முதல் மாடிக்கும், 2-வது மாடிக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள 'சன்ஷேடில்' ஆடு இருந்ததால் அதை அந்த பகுதி பொதுமக்களால் மீட்க முடியவில்லை. இதுகுறித்து நாகை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வீரர்கள் வந்து ராட்சத ஏணி மூலம் ஏறி ஆட்டை பத்திரமாக மீட்டனர். இதையடுத்து பொதுமக்கள் தீயணைப்பு வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.


Next Story