பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு


பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு
x

பெண்ணிடம் தங்க சங்கிலி பறிக்கப்பட்டது.

திருச்சி

துறையூர் அருகே செங்காட்டுப்பட்டி களரம்பட்டியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது தாய் செல்லப்பாப்பு நேற்று காலையில் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு வெங்காயம் உறித்துக்கொண்டு இருந்தார். அப்போது, ஹெல்மெட் அணிந்து கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம ஆசாமிகள் செல்லப்பாப்புவை தாக்கி விட்டு அவர் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இது குறித்த புகாரின் பேரில் துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்க சங்கிலியை பறித்த மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.


Next Story