தங்கப்பதக்கம் வென்றும் வறுமையில் தவிக்கும் கைப்பந்து வீரர்


தங்கப்பதக்கம் வென்றும் வறுமையில் தவிக்கும் கைப்பந்து வீரர்
x

தங்கப்பதக்கம் வென்றும் கைப்பந்து வீரர் வறுமையில் தவிக்கிறார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் திருப்பதி (வயது 57). இவரது மகன் அசோக்குமார் (23). இவர் கைப்பந்து போட்டியில் பள்ளி அளவிலான போட்டிகளிலும், மாவட்ட அளவிலான போட்டிகளிலும், மாநில அளவிலான போட்டிகளிலும் வி்ளையாடி உள்ளார்.

கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் கோவா அணியை 24-17 என்ற வித்தியாசத்தில் வெற்றி பெற செய்து தங்கப்பதக்கம் பெற்றார். நேபாளத்தில் நடைபெற்ற உலக அளவிலான கைப்பந்து போட்டியில் அசோக்குமார் பங்கேற்க முடியாமல் தவித்து வந்துள்ளார். அதேப் பகுதியை சேர்ந்த அருண்குமார் மற்றும் அவரது நண்பர்கள் நிதியுதவி செய்து அசோக்குமாரை நேபாளத்தில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க அனுப்பி வைத்துள்ளனர். இந்த போட்டியில் நேபாள அணியை 24-19 என்ற விகிதத்தில் வெற்றி பெற செய்து சாதனை படைத்துள்ளார்.

இந்த நிலையில் அவரது தந்தை மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவ்வப்போது கிடைக்கும் வேலைகளை செய்து வரும் வருமானத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட தந்தையின் மருத்துவச் செலவிற்கும், கல்லூரி பயின்று வரும் தம்பியின் படிப்பு செலவிற்குமே பணம் போதவில்லை. எனவே தந்தையின் மருத்துவ ெசலவுக்கும், தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க தமிழ்நாடு முதல்-அமைச்சர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆகியோர் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.


Next Story