விளையாட்டு மைதானம், கழிப்பறை வசதி இல்லாத அரசு மேல்நிலைப்பள்ளி
விளையாட்டு மைதானம், கழிப்பறை வசதி இல்லாத பழையனூர் அரசு மேல்நிலைப்பள்ளியை அதிகாரிகள் பார்வையிட்டு தேவையான வசதிகளை செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
வாணாபுரம்
விளையாட்டு மைதானம், கழிப்பறை வசதி இல்லாத பழையனூர் அரசு மேல்நிலைப்பள்ளியை அதிகாரிகள் பார்வையிட்டு தேவையான வசதிகளை செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
பழையனூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு பழையனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பள்ளியின் வகுப்பறை கட்டிடத்தை தவிர மற்ற இடங்கள் அனைத்தும் பாறைகள் நிறைந்து காணப்படுகிறது.மேலும் விளையாட்டு மைதானங்கள் கூட இல்லை. இது ஒரு புறம் இருந்தாலும் படிக்கும் மாணவர்களுக்கு தகுந்தவாறு கழிப்பறை வசதிகள் இல்லாததால் பாறைகள் உள்ள இடங்களுக்கு விஷ ஜந்துக்களின் அச்சுறுத்தல்களால் செல்கின்றனர்.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், ''சுற்றுவட்டாரத்தில் இருந்து இங்கு நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்துச் செல்கின்றனர்கள். விளையாட்டு மைதானம் இல்லாமல் பாறைகள் நிறைந்து காணப்படுவதால் மாணவ மாணவிகளின் தனித்திறன் விளையாட்டுக்கள் முழுவதும் கேள்விக்குறியான நிலையில் உள்ளது.
கல்வித்துறை அதிகாரிகள் பள்ளியின் வளாகத்தை நேரில் ஆய்வு செய்து மாணவர்களுக்கு என்று தனியாக கழிவறை கட்டிடம் கட்டுவது மட்டுமல்லாமல் பள்ளி வளாகம் முழுவதும் இருக்கும் பாறைகளை அகற்றி விட்டு விளையாட்டு மைதானத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.