பிரம்மதேசம் அருகேபட்டதாரி வாலிபர் தற்கொலைபோலீசில் சேர முடியாமல் போனதால் விபரீத முடிவு


பிரம்மதேசம் அருகேபட்டதாரி வாலிபர் தற்கொலைபோலீசில் சேர முடியாமல் போனதால் விபரீத முடிவு
x
தினத்தந்தி 17 July 2023 12:15 AM IST (Updated: 17 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பிரம்மதேசம் அருகே பட்டதாரி வாலிபர் போலீசில் சேர முடியாமல் போனதால் தற்கொலை செய்து கொண்டாா்.

விழுப்புரம்


பிரம்மதேசம்,

பிரம்மதேசம் பழைய காலணியை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் மகன் சரவணகுமார் (வயது 25). இவர் எம்.எஸ்சி. பட்டதாரி. போலீசில் சேர்ந்து பணி செய்ய வேண்டும் என்பது இவரது லட்சியமாக இருந்து வந்துள்ளது.

இதனால் போலீசில் சேர்வதற்கு விண்ணப்பித்து, அதற்கான தேர்வுகள் அனைத்திலும் தேர்ச்சி பெற்ற நிலையில், மருத்துவ பரிசோதனையில் தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது.

இதனால் தனக்கு காவல்துறையில் வேலை கிடைக்காது என மன உளைச்சலில் இருந்து வந்த சரவணகுமார், நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்கு போட்டுக்கொண்டார். இதையடுத்து அவரை மீட்டு உறவினர்கள் சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்குகொண்டு சென்றனர். அங்கு சரவணகுமாரை பரிசோதனை செய்த டாக்டர், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து சரவணகுமாரின் தாய் குப்பு பிரம்மதேசம் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story