விஷம் குடித்து பட்டதாரி வாலிபர் தற்கொலை


விஷம் குடித்து பட்டதாரி வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 21 May 2023 12:15 AM IST (Updated: 21 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் முதுநகர் அருகே ஒருதலை காதலால் விஷம் குடித்து பட்டதாரி வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

கடலூர்

கடலூர் முதுநகர்,

கடலூர் அருகே ராமாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகரன் மகன் பிரபாகரன் (வயது 28). பி.ஏ. படித்துள்ள இவர் நீண்ட நாட்களாக ஒரு இளம்பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பிரபாகரன் தனது காதலை அந்த பெண்ணிடம் தெரிவித்துள்ளார்.

ஆனால் அந்த பெண் பிரபாகரனின் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிகிறது. இதனால் மனமுடைந்த அவர் சேடப்பாளையம் ரெயில்வே கேட் அருகில் விஷம் குடித்து விட்டு மயங்கிய நிலையில் கிடந்தார். இதைபார்த்த அக்கம் பக்கத்தினர் பிரபாகரனை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

போலீசார் விசாரணை

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பிரபாகரன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story