பட்டதாரி வாலிபர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை


பட்டதாரி வாலிபர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
x

திருச்சியில் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சையில் இருந்த பட்டதாரி வாலிபர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி

திருச்சியில் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சையில் இருந்த பட்டதாரி வாலிபர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

ஐ.டி. நிறுவன ஊழியர்

திருச்சி வயலூர் ரோடு இரட்டை வாய்க்கால் பகுதியை சேர்ந்தவர் வீரப்பிள்ளை. இவரது மகன் பிரவீன்குமார் (வயது 34). எம்.எஸ்.சி. பட்டதாரியான இவர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் கள ஆய்வாளராக திருச்சியில் பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் திருமணம் முடிந்த 20 நாளில் மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இதனால் பிரவீன்குமார் மது பழக்கத்துக்கு அடிமையானார். இதைத்தொடர்ந்து அவரது பெற்றோர் திருச்சி- கரூர் ரோட்டில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் பிரவீன் குமாரை கடந்த 7-ந்தேதி சேர்த்துள்ளனர்.

மாடியில் இருந்து குதித்தார்

ஆனாலும் அவரால் மதுபழக்கத்தில் இருந்து மீள முடியவில்லை. இதனால் மன அழுத்தத்திற்கு உள்ளான பிரவீன்குமார் நேற்று போதை மறுவாழ்வு மையத்தின் முதல் மாடியில் இருந்து கீழே குதித்தார்.

இதில் பலத்த காயம் அடைந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பிரவீன்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story