அரசு பள்ளியில் முப்பெரும் விழா


அரசு பள்ளியில் முப்பெரும் விழா
x

வத்தலக்குண்டு அருகே அரசு பள்ளியில் முப்பெரும் விழா நடந்தது.

திண்டுக்கல்

வத்தலக்குண்டு அருகே உள்ள பழைய வத்தலக்குண்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள், சுற்றுச்சுவர் திறப்பு மற்றும் மரக்கன்று நடும் விழா என முப்பெரும் விழா நடந்தது. இதற்கு வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் பரமேஸ்வரி முருகன் தலைமை தாங்கி, பள்ளி புதிய சுற்றுச்சுவரை திறந்து வைத்தார். மாவட்ட கல்வி அதிகாரி பாண்டித்துரை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உதயகுமார், இந்திராணி, ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர் ரமேஷ், பழைய வத்தலக்குண்டு ஊராட்சி தலைவர் யசோதா, ஒன்றிய கவுன்சிலர்கள் செல்லம்மாள், விஜயகர், பசுமை வதிலை இயக்க தலைவர் மருதராஜன், 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் பாலு, வனராஜா மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் 108 ஆம்புலன்ஸ் பயன்பாடு குறித்து பள்ளி மாணவர்களுக்கு விளக்கி கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.


Next Story