நடுரோட்டில் கவிழ்ந்த வைக்கோல் லாரி


நடுரோட்டில் கவிழ்ந்த வைக்கோல் லாரி
x

கள்ளிமந்தையம் அருகே நடுரோட்டில் வைக்கோல் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் காயம் அடைந்தார்.

திண்டுக்கல்

ஒட்டன்சத்திரத்தில் இருந்து கள்ளிமந்தையத்துக்கு வைக்கோல் ஏற்றிக்கொண்டு நேற்று காலை லாரி ஒன்று புறப்பட்டது. அந்த லாரியை, வாடிப்பட்டியை சேர்ந்த அழகர்சாமி (வயது 50) ஓட்டினார். ஒட்டன்சத்திரம்-தாராபுரம் சாலையில் இருந்து கள்ளிமந்தையத்தில் புறவழிச்சாலையில் லாரி திரும்பியது.

அப்போது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி நடுரோட்டில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிரைவர் அழகர்சாமிக்கு காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஒட்டன்சத்திரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து கள்ளிமந்தையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். நடுரோட்டில் லாரி கவிழ்ந்ததால் சிறிதுநேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story