பூட்டிய வீட்டுக்குள் பிணமாக கிடந்த சுகாதார ஆய்வாளர்


பூட்டிய வீட்டுக்குள் பிணமாக கிடந்த சுகாதார ஆய்வாளர்
x

பூட்டிய வீட்டுக்குள் பிணமாக கிடந்த சுகாதார ஆய்வாளர்

மதுரை

ிருப்பரங்குன்றம்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பழனியாண்டவர் கோவில் தெருவில் வசித்து வந்தவர் முகமதுரசூல்(வயது 34). இவர் வாடிப்பட்டியில் சுகாதார ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும், அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது அதனால் முகமது ரசூல் தனியாக வசித்து வந்துள்ளார். இந்தநிலையில் அவரது வீட்டினுள் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதியினர் திருப்பரங்குன்றம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து போலீசார் அங்கு சென்று கதவை உடைத்து பார்த்தபோது அழுகிய நிலையில் முகமதுரசூல் இறந்து கிடந்தார். அவர் மாரடைப்பு காரணமாகவோ அல்லது விஷம் குடித்தோ இறந்திருக்கலாம் என தெரிகிறது. எனினும் பிரேத பரிசோதனைக்கு பிறகே அவர் இறந்ததற்கானகாரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர் இதுகுறித்து திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story