ஆரோக்கியமான வாழ்க்கை முறையால் சிறுநீரக நோய் வராமல் தடுக்கலாம் - மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரி விழிப்புணர்வு கருத்தரங்கில் தகவல்


ஆரோக்கியமான வாழ்க்கை முறையால்  சிறுநீரக நோய் வராமல் தடுக்கலாம்  -  மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரி விழிப்புணர்வு கருத்தரங்கில் தகவல்
x

ஆரோக்கியமான வாழ்க்கை முறையால் சிறுநீரக நோய் வராமல் தடுக்கலாம் என மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரி விழிப்புணர்வு கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.

மதுரை


ஆரோக்கியமான வாழ்க்கை முறையால் சிறுநீரக நோய் வராமல் தடுக்கலாம் என மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரி விழிப்புணர்வு கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.

விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக சிறுநீரக தினத்தையொட்டி சிறுநீரக கோளாறுகள் குறித்து நோயாளிகள், ஆஸ்பத்திரி பணியாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கருத்தரங்கு மதுரை மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடந்தது. இதில், சிறுநீரகங்களை ஆரோக்கியமாக பேணுவதற்கு வாழ்க்கை முறை மாற்றங்களை செய்வதன் அவசியத்தை ஆஸ்பத்திரி நிபுணர்கள் வலியுறுத்தினர்.

அப்போது உடற்பயிற்சி, உடல் எடை மேலாண்மை, மதுபானம் மற்றும் போதைப் பொருட்களை முற்றிலுமாக தவிர்ப்பது, மருத்துவர் ஆலோசனையின்றி சுயமாக மருந்துகளை உட்கொள்வதை தவிர்ப்பது, குறைந்த கொழுப்புள்ள உணவுகளை உள்ளடக்கிய உணவுமுறையை பின்பற்றுவது வாழ்க்கை முறை மாற்றங்களுள் உள்ளடங்கும்.

ஆரோக்கியமான வாழ்க்கை முறை

கருத்தரங்கில் மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரியின் சிறுநீரகவியல் துறையின் தலைவரும் முதுநிலை மருத்துவ நிபுணருமான சம்பத்குமார் பேசும்போது, இந்தியாவில் பல்வேறு சிறுநீரக நோய்களினால் 10 நபர்களில் ஒருவர் பாதிக்கப்பட்டிருக்கிறார். சுகாதாரமற்ற உணவு மற்றும் நீர் உட்கொள்வது சிறுநீரக செயலிழப்பை விளைவிக்கக்கூடும். வலி நிவாரணி மருந்துகளை நீண்டகாலமாக எடுத்துக்கொள்வதும் சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தும்.

அதிகம் மது அருந்துவதால் கல்லீரல், கணையம் பாதித்து சிறுநீரக செயலிழப்பிற்கு வழிவகுக்கும். போதுமான அளவு நீர் அருந்துவது, உப்பு அதிகமுள்ள உணவுகள் உட்கொள்வதை குறைப்பது, துரித உணவுகளை தவிர்ப்பது, பழங்களையும், காய்கறிகளையும் உண்பது, உடற்பயிற்சி, நடைப்பயிற்சியில் ஈடுபடுவது ஆகியவை ஆரோக்கியமான வாழ்க்கை முறை சிறுநீரக நோய் வராமல் தடுப்பதற்கு உதவும் என்றார்.

புதிய திட்டம்

சிறுநீரகவியல் துறை முதுநிலை நிபுணர் டாக்டர் ஆண்ட்ரூ தீபக் ராஜிவ் பேசுகையில், "சிறுநீரக நோய் வராமல் தடுக்க, தற்காலத்தில் அதிகமாக காணப்படும் வாழ்க்கை முறை சீர்கேடுகளான உடற்பருமன், அதிக ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் ஆகியவற்றிற்கு உரிய திறன்மிக்க சிகிச்சை அளிக்க வேண்டும். இதனால் முன்தடுப்பு வழிமுறைகளை சரியான நேரத்தில் செயல்படுத்த முடியும். உலக சிறுநீரக தினம் 2023 நிகழ்விற்காக கவனம் செலுத்த வேண்டிய மூன்று முக்கிய அம்சங்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன. அனைவருக்கும் சிறுநீரக ஆரோக்கியத்திற்கான உத்தரவாதம், பெருந்தொற்றுகள், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட ஏழைகளை பாதுகாப்பது என்றார்.

ஆஸ்பத்திரியின் மருத்துவ நிர்வாகி டாக்டர் கண்ணன் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். சிறுநீரக ேகாளாறுகளுக்காக டயாலிசிஸ் மற்றும் மேம்பட்ட சிகிச்சை தேவைப்படும் நபர்கள் நிதி பிரச்சினையால் அவதிப்படும்போது அவர்களுக்கு உதவும் வகையில் "மீனாட்சி சிறுநீரக நிதி" என்ற புதிய திட்டத்தை மீனாட்சி மிஷன் மருத்துவமனை சமீபத்தில் தொடங்கி இருக்கிறது.


Next Story