ஆற்றூர் கழுவன்திட்டையில் பரளியாற்றில் உயர்மட்ட பாலம் விஜய் வசந்த் எம்.பி. தகவல்


ஆற்றூர் கழுவன்திட்டையில் பரளியாற்றில் உயர்மட்ட பாலம்   விஜய் வசந்த் எம்.பி. தகவல்
x

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு செல்ல ஆற்றூர் கழுவன்திட்டையில் பரளியாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக விஜய் வசந்த் எம்.பி. கூறினார்.

கன்னியாகுமரி

திருவட்டார்,

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு செல்ல ஆற்றூர் கழுவன்திட்டையில் பரளியாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக விஜய் வசந்த் எம்.பி. கூறினார்.

சாமி தரிசனம்

திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலுக்கு விஜய் வசந்த் எம்.பி. சாமி தரிசனம் செய்ய வந்தார். அவருடன் திருவட்டார் கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் ஜெகன்ராஜ், மாநில குழு உறுப்பினர்கள் ரெத்தினகுமார், வேர்க்கிளம்பி பேரூராட்சி தலைவர் சுஜீர் ஜெபசிங்குமார், திருவட்டார் பேரூர் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சிவ சங்கர் உள்பட பலர் உடனிருந்தனர்.

கோவில் மேலாளர் மோகன் குமார் வரவேற்றார். பின்னர், விஜய் வசந்த் எம்.பி. கோவிலை சுற்றி பார்த்து சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கோவிலில் முடிக்க வேண்டிய வேலைகள் சில உள்ளன. அவற்றை அறநிலையத்துறை முடிக்க வேண்டும்.

உயர் மட்டப்பாலம்

ஆற்றூர் கழுவன்திட்டையில் இருந்து கோவிலுக்கு வரும் பக்தர்கள் தற்போது பரளியாற்றில் உள்ள தற்காலிக பாலம் வழியாக வந்து செல்கிறார்கள். இங்கு ஆற்றின் மேல்பகுதியில் சப்பாத்து பாலம் அமைக்க திட்டமிடப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.75 லட்சம் ஒதுக்கப்பட்டது.

ஆனால் இங்கு உயர்மட்ட பாலம் அமைத்தால்தான் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என இந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

எனவே திருத்திய மதிப்பீடு தயார் செய்யப்பட்டு உயர் மட்ட பாலம் அமைப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். சம்பந்தப்பட்ட துறையினருடன் இதுதொடர்பாக பேசியுள்ளேன். விரைவில் இதற்கான வேலைகள் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story