பட்டாசு வெடித்ததில் வீட்டு பந்தல் தீப்பிடித்து நாசம்


பட்டாசு வெடித்ததில் வீட்டு பந்தல் தீப்பிடித்து நாசம்
x

பாவூர்சத்திரம் அருகே திருமண வீட்டார் பட்டாசு வெடித்ததில், அருகில் உள்ள வீட்டு பந்தல் தீப்பிடித்து நாசமானது.

தென்காசி

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் அருகே உள்ள அருணாப்பேரியில் வசித்து வருபவர் ஆறுமுகநாதன் (வயது 65). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவரது வீட்டின் முன்புறம் நிழலுக்காக ஓலையால் ஆன பந்தல் அமைத்துள்ளார். இந்த நிலையில் நேற்று அந்த ஊரில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அப்போது திருமண வீட்டார் பட்டாசு வெடித்துள்ளனர்.

இதில் பட்டாசு எதிர்பாராதவிதமாக ஆறுமுகநாதன் வீட்டு பந்தலில் விழுந்து தீப்பற்றி எரிந்தது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருந்தாலும் பந்தல் முற்றிலும் எரிந்து சாம்பலானது. இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story