697 சுற்றுலா பயணிகளுடன் தூத்துக்குடி வந்த பிரம்மாண்ட கப்பல்...!


697 சுற்றுலா பயணிகளுடன் தூத்துக்குடி வந்த பிரம்மாண்ட கப்பல்...!
x

பகாமஸ் நாட்டை சேர்ந்த எம்.எஸ். அமேரா என்ற சுற்றுலா பயணிகள் கப்பல் 697 பயணிகளுடன் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்தது.

தூத்துக்குடி,

மெக்சிகோ நாட்டிற்கு தெற்கே உள்ள, அமெரிக்காவை சுற்றியுள்ள தீவு நாடுகளில் ஒன்றான பகாமஸ் நாட்டை சேர்ந்த எம்.எஸ். அமேரா என்ற சுற்றுலா பயணிகள் கப்பல் 697 பயணிகளுடன் தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரில் கடந்த நவம்பர் 23-ந் தேதி புறப்பட்டது. தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கு கலாசார சுற்றுப்பயணம் மேற்கொண்டது.

கடைசியாக இந்தியாவில் கேரளா மாநிலம் கொச்சின் துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட எம்.எஸ். அமேரா சுற்றுலா பயணிகள் கப்பல் இன்று காலை தூத்துக்குடி புதியதுறைமுகத்திற்கு வந்தது.

இங்கிருந்து துறைமுக குடியுரிமை அனுமதியுடன் 350-க்கும் மேற்பட்ட பயணிகள் பஸ்களில் நெல்லை நெல்லையப்பர் கோவில் மற்றும் தூத்துக்குடி பகுதிகளில் மாதா கோவில் உள்ளிட்ட முக்கியமான சுற்றுலா இடங்களை பார்வையிடுகின்றனர். அதன் பின்னர் இன்று மாலையில் தூத்துக்குடியில் இருந்து இலங்கை துறைமுகம் புறப்பட்டு செல்ல உள்ளனர்.


Next Story