காந்தி வேடத்தில் கர்நாடக விவசாயி நடைபயணம்


காந்தி வேடத்தில் கர்நாடக விவசாயி நடைபயணம்
x

காந்தி வேடத்தில் கர்நாடக விவசாயி நடைபயணம் மேற்கொண்டார்.

விருதுநகர்

கர்நாடகா மாநிலம் கடக் மாவட்டத்தை சேர்ந்தவர் முத்தண்ணா (வயது 53). விவசாயியான இவர் காந்திய கோட்பாடுகளை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் இளைஞர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்திலும் கடந்த செப்டம்பர் 9-ந் தேதி கர்நாடகத்திலிருந்து கன்னியாகுமரி வரையிலான நடை பயணத்தை காந்தி வேடமணிந்து தொடங்கியுள்ளார். நேற்று விருதுநகர் வருகை தந்த இவர் அக்டோபர் 2-ந் தேதி கன்னியாகுமரி விவேகானந்தர்பாறையில் தனது நடை பயணத்தை நிறைவு செய்கிறார்.


Next Story