சேலம் மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.1,600-க்கு விற்பனை
சேலம் மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.1,600-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சேலம்
தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பனியின் தாக்கம் அதிகரித்து உள்ளது. இதனால் பூக்கள் உற்பத்தி குறைந்தது. இதன் எதிரொலியாக சேலம் பூ மார்க்கெட்டு்க்கு மலர்கள் வரத்து குறைந்துள்ள நிலையில், அவற்றின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. குறிப்பாக மல்லிகை பூ ஒரு கிலோ நேற்று 1,600-க்கு விலை உயர்ந்து விற்பனை ஆனது. அதேபோன்று நேற்று மார்க்கெட்டில் முல்லைப்பூ கிலோ ஒன்று ரூ.320-க்கும், காக்கட்டான் பூ ரூ.400-க்கும், அரளிப்பூ ரூ.160-க்கும் விற்பனை செய்யப்பட்டன.
Related Tags :
Next Story