ஒரு கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்


ஒரு கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்
x

திருச்சி விமான நிலையத்தில் ஒரு கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன.

திருச்சி

திருச்சி விமான நிலையத்தில் ஒரு கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர் சம்பவம்

திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் தங்கம் கடத்தி வரும் சம்பவம் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த 15 நாட்களில் சுமார் 5 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடத்தலை தடுக்க சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனாலும் கடத்தல் சம்பவம் குறைந்தபாடில்லை.

குறிப்பாக துபாய் மற்றும் சிங்கப்பூர், சார்ஜா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தி வரப்படுகிறது. இந்த நிலையில் துபாய் மற்றும் சார்ஜாவில் இருந்து நேற்று விமானம் திருச்சி வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

தங்க பவுடர்

அப்போது, துபாயிலிருந்து ஏர் இந்தியா விமானத்தில் ஒரு பயணி கொண்டு வந்த அட்டைப்பெட்டியை சோதனையிட்டனர். அதில் 157 கிராம் எடையுள்ள ரூ.8 லட்சத்து 9 ஆயிரத்து ,865 மதிப்புள்ள தங்கத்தை பவுடர் வடிவில் மறைத்து அட்ைட பெட்டியில் வைத்து எடுத்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த தங்கத்தை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அதே போல சார்ஜாவிலிருந்து வந்த பயணி தன் காலணி ஷாக்சில் 664 கிராம் எடையுள்ள ரூ.34 லட்சத்து 14 ஆயிரத்து 388 மதிப்புள்ள தங்கத்தை பேஸ்ட் வடிவில் மறைத்து வைத்து கடத்தி வந்தது. தெரியவந்தது. இதனையடுத்து அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்தனர். மேலும் 2 பயணிகளிடமும் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கழிவறையில் சிக்கி தங்கம்

இது தவிர விமான நிலையத்தில் உள்ள ஆண்கள் கழிவறையில் 299 கிராம் எடையுள்ள ரூ.13 லட்சத்து 70 ஆயிரத்து 340 மதிப்பிலான தங்கம் கேட்பாரற்று கிடந்துள்ளது. அந்த தங்கத்தையும் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அதை யார் எடுத்து வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story