குழித்துறையில்ஆற்று வெள்ளத்தில் சிக்கி செடி, கொடிகளை பிடித்து உயிர் தப்பிய தொழிலாளி


குழித்துறையில்ஆற்று வெள்ளத்தில் சிக்கி செடி, கொடிகளை பிடித்து உயிர் தப்பிய தொழிலாளி
x

குழித்துறையில் ஆற்று வெள்ளத்தில் சிக்கி செடி, கொடிகளை பிடித்து தொழிலாளி உயிர் தப்பினார். அவரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

கன்னியாகுமரி

குழித்துறை:

குழித்துறையில் ஆற்று வெள்ளத்தில் சிக்கி செடி, கொடிகளை பிடித்து தொழிலாளி உயிர் தப்பினார். அவரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

தடுப்பணையில் நடந்து சென்றவர்

குமரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரிநீர் திறந்து விடப்படுகிறது. இதனால் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் அதிக அளவு வெள்ளம் பாய்கிறது. ஆற்றின் குறுக்கே உள்ள தடுப்பணை மீது முழங்கால் அளவு தண்ணீர் பாய்கிறது. அதனால் தடுப்பணை மீது பொதுமக்கள் நடந்து செல்லவும், இரு சக்கர வாகனங்கள் ஓட்டி செல்லவும் அனுமதிக்கப்படவில்லை.

இந்த நிலையில் நேற்று பிற்பகலில் ஒருவர் வெட்டுமணி பகுதியில் இருந்து தடுப்பணை வழியாக மறுகரைக்கு நடந்து சென்றார்.

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்

அப்போது திடீரென்று தவறி ஆற்றுக்குள் விழுந்தார். விழுந்த வேகத்தில் ஆற்றுநீர் அவரை வேகமாக இழுத்து சென்றது. ஆனால் அவருக்கு நீச்சல் தெரிந்திருந்ததால் அதை சமாளித்துக் கொண்டு மிகவும் சிரமப்பட்டு நீந்தினார். இறுதியில் புதிய ஆற்றுப்பாலத்திற்கு அருகில் உள்ள புதர் மேட்டுப் பகுதியில் செடிகளை பிடித்து உயிர் தப்பினார்.

அதன்பின்பு கரைப்பகுதிக்கு வரமுடியாமல் அங்கேயே சிக்கி தவித்தார். இதுகுறித்து அந்தப் பகுதியில் நின்ற சிலர் குழித்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்

உடனே தீயணைப்பு நிலைய அதிகாரி சந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அங்கே விரைந்து வந்து ஆற்றில் சிக்கி தவித்துக் கொண்டிருந்த அந்த நபரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். சுமார் 1 மணி நேரம் செடி, கொடிகளை பிடித்தபடி அவர் போராடினார்.

விசாரணையில் அவர் மார்த்தாண்டம் அருகே உள்ள பேரை பகுதியை சேர்ந்த ெதாழிலாளி தேவராஜ் என்பது தெரிய வந்தது. பின்னர் அவரை பத்திரமாக வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story