தூக்குப்போட்டு கூலித்தொழிலாளி தற்கொலை


தூக்குப்போட்டு கூலித்தொழிலாளி தற்கொலை
x

தூக்குப்போட்டு கூலித்தொழிலாளி தற்கொலை

தஞ்சாவூர்

தஞ்சை அருகே ரெட்டிப்பாளையம் ஒளிகை தெருவை சேர்ந்தவர் குமார் (வயது43). கூலித்தொழிலாளி. இவரது மனைவி மாரியம்மாள். குடும்ப தகராறு காரணமாக கடந்த 6 மாதத்திற்கு முன்பு குமாரிடம் கோபித்து கொண்டு மாரியம்மாள் வீட்டை விட்டு சென்றுவிட்டார். இதனால் மனவேதனையில் குமார் இருந்து வந்துள்ளார். நேற்றுமுன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கள்ளப்பெரம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து குமாரின் தாய் லட்சுமி (65) கொடுத்த புகாரின் பேரில் கள்ளப்பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story