பந்தல் அமைத்த போது தவறி விழுந்த தொழிலாளி சாவு
பந்தல் அமைத்த போது தவறி விழுந்த தொழிலாளி சாவு
திருவட்டார்:
திருவட்டார் அருகே உள்ள செங்கோடி மாத்தார் பகுதியை சேர்ந்தவர் மணிதாஸ் (வயது 59). பந்தல் அமைக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
இவருக்கு மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனர். இவர் மாத்தார் பகுதியில் உள்ள காவு கோவில் திருவிழாவுக்காக பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்டார். அதன்படி கடந்த மாதம் 20-ந் தேதி இவர் பந்தல் அமைத்த போது உயரமான இடத்தில் இருந்து கீழே விழுந்ததில் காயமடைந்தார். உடனே அவரை சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்றுமுன்தினம் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.