புதுக்கடை அருகே பந்தல் பிரித்த போது தவறி விழுந்த தொழிலாளி பலி
புதுக்கடை அருகே பந்தல் பிரித்த போது தவறி விழுந்த தொழிலாளி பலியானார்.
கன்னியாகுமரி
புதுக்கடை:
புதுக்கடை அருகே பந்தல் பிரித்த போது தவறி விழுந்த தொழிலாளி பலியானார்.
புதுக்கடை அருகே உள்ள பைங்குளம், தேம்பிறவிளை பகுதியைச் சேர்ந்தவர் விஜயன் (வயது64), கூலி தொழிலாளி. இவர் சம்பவத்தன்று முக்காடு பகுதியில் கட்டியிருந்த பந்தல் பிரிக்கும் வேலைக்கு சென்றார். அங்கு பணியில் ஈடுபட்ட போது பந்தலில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி விஜயன் நேற்று பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக அவருடைய மனைவி சாரதா கொடுத்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story