மர்மமான முறையில் கிணற்றில் பிணமாக கிடந்த தொழிலாளி


மர்மமான முறையில் கிணற்றில் பிணமாக கிடந்த தொழிலாளி
x

ஆம்பூர் அருகே மர்மமான முறையில் கிணற்றில் தொழிலாளி பிணமாக கிடந்தார்.

திருப்பத்தூர்

ஆம்பூர் அடுத்த சின்னவரிகம் பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (வயது 35). கூலி வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டை விட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று உமராபாத் பகுதியில் உள்ள கிணற்றில் குமரேசன் பிணம் மிதப்பதாக குடும்பத்தினருக்கு மற்றும் போலீசாருக்கு சிலர் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உமராபாத் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் கிணற்றில் பிணமாக கிடந்த குமரேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து குமரேசன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story