இளம் பெண்ணை கடத்தி திருமணம் செய்த தொழிலாளி போக்சோவில் கைது


இளம் பெண்ணை கடத்தி திருமணம் செய்த தொழிலாளி  போக்சோவில் கைது
x

இளம் பெண்ணை கடத்தி திருமணம் செய்த தொழிலாளி போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

திருப்பத்தூர்

ஆம்பூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது இளம்பெண் அங்குள்ள ஒரு ஷூ கம்பெனியில் வேலை செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலைக்கு சென்ற அவர் வீடுதிரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் இது குறித்து உமராபாத் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் இளம்பெண்ைண ஆம்பூரை அடுத்த சின்னவரிக்கம் பகுதியை சேர்ந்த ஜான்சன் (வயது 26) என்பவர் கடத்தி சென்று வேளாங்கண்ணியில் வைத்து கடந்த 14-ந் தேதி திருமணம் செய்து கொண்டது தெரிய வந்தது. இதைய‍டுத்து அவர்களை போலீசார் பிடித்து உமராபாத் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி இளம் பெண்ணை பெற்றோருடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.

அவரை கடத்திச்சென்று திருமணம் செய்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஜான்சனை கைது செய்தனர்.


Next Story