போடி அருகே பெண் தற்கொலை


போடி அருகே பெண் தற்கொலை
x
தினத்தந்தி 10 Aug 2023 2:30 AM IST (Updated: 10 Aug 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

போடி அருகே பெண் தற்கொலை செய்துகொண்டார்.

தேனி

போடி அருகே உள்ள தருமத்துப்பட்டியை சேர்ந்த கருப்பசாமி மனைவி வசந்தா (வயது 45). இவருடைய கணவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வாகன விபத்தில் இறந்து விட்டார். அதன்பிறகு வசந்தா, பூதிப்புரத்தில் உள்ள தனது மகன் மணிகண்டன் வீட்டில் வசித்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் வசந்தா அரளிவிதையை அரைத்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

வாந்தி எடுத்து மயக்க நிலையில் இருந்த அவரை அவருடைய குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். பல ஆண்டுகளாக தலைவலியால் அவதிப்பட்டு வந்ததாகவும், அதனால் மனம் உடைந்து தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவருடைய மகன் மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story