ஒட்டன்சத்திரம் அருகே வாலிபருடன் விஷம் குடித்த கள்ளக்காதலி சாவு


ஒட்டன்சத்திரம் அருகே வாலிபருடன் விஷம் குடித்த கள்ளக்காதலி சாவு
x
தினத்தந்தி 23 Jun 2022 8:20 PM IST (Updated: 24 Jun 2022 10:48 AM IST)
t-max-icont-min-icon

ஒட்டன்சத்திரம் அருகே வாலிபருடன் விஷம் குடித்த கள்ளக்காதலி உயிரிழந்தார்.

திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தங்கச்சியம்மாபட்டியை சேர்ந்தவர் ராஜசேகரன் (வயது 23). இவருக்கு திருமணமாகி மேரி என்ற மனைவியும், 1½ வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். இவருக்கும், அம்பிளிக்கையை சேர்ந்த ஆறுமுகம் மனைவி சுதாவுக்கும் (30) பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியது.

இதையடுத்து 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர். இதுகுறித்து அறிந்த மேரி, தனது கணவரை கண்டித்தார். இதனால் சேர்ந்து வாழ முடியாது என எண்ணிய ராஜசேகரனும், சுதாவும் கடந்த 21-ந்தேதி ஒட்டன்சத்திரம் அருகே பாச்சலூர் பால்கடை பகுதிக்கு சென்று விஷம் குடித்தனர். இதில் மயங்கி விழுந்த 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராஜசேகரன் இறந்தார்.

சுதா ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் சுதாவும் சிகிச்சை பலனின்றி இன்று இறந்தார். இந்த சம்பவம் குறித்து தாண்டிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story