மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் பலி; கண்கள் தானம்
தாண்டிக்குடியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் பலியானார். அவரது கண்கள் தானம் செய்யப்பட்டது.
திண்டுக்கல்
கொடைக்கானல் கீழ்மலை பகுதியான தாண்டிக்குடியை சேர்ந்தவர் சுரேந்திரன். இவரது மனைவி பிரியா (வயது 47). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்தநிலையில் சம்பவத்தன்று சுரேந்திரன் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் தாண்டிக்குடி அருகே உள்ள கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்று கொண்டிருந்தார். அப்போது மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் இருந்து பிரியா நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
இதில், படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பிரியா நேற்று முன்தினம் இறந்தார். இதுகுறித்து தாண்டிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே உயிரிழந்த பிரியாவின் கண்கள் அவரது குடும்பத்தினர் அனுமதியுடன் தானமாக வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story