பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கணவரை விடுவிக்கக்கோரி பெண் ஒருவர் கத்தியால் கையை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கணவரை விடுவிக்கக்கோரி பெண் ஒருவர் கத்தியால் கையை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பூர்
பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கணவரை விடுவிக்கக்கோரி பெண் ஒருவர் கத்தியால் கையை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
4 குழந்தைகளின் தாய்
திருப்பூர் சந்திராபுரத்தை சேர்ந்தவர் செந்திலா (வயது 35). இவருடைய கணவர் லட்சுமணன் (35). இவர்களுக்கு 3 மகள்கள், 1 மகன் உள்ளனர். லட்சுமணனின் சகோதரர் முருகன். அவருடைய மனைவி நாகவள்ளி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். லட்சுமணன், முருகன் ஆகியோரை ஒரு குற்ற வழக்கில் நல்லூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்தநிலையில் நேற்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு செந்திலா, நாகவள்ளி ஆகியோர் குழந்தைகளுடன் வந்தனர். அங்கு 2-வது தளத்தில் உள்ள கலெக்டர் அறை முன் தரையில் அமர்ந்து திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர்.
தங்களின் கணவர்கள் மீது போலீசார் பொய் வழக்கு போட்டு சிறையில் தள்ளிவிட்டனர், 2 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர், அவ்வாறு செய்தால் 6 குழந்தைகளை வைத்து நாங்கள் குடும்பம் நடத்த முடியாது. 2 பேரையும் மன்னித்து விடுவிக்க வேண்டும் அல்லது எங்களை கருணைக் கொலை செய்யுங்கள் என்று கூறினார்கள்.
கையை அறுத்த பெண்
அப்போது செந்திலா, திடீரென்று கத்தியால் தனது இடது கையை கீறினார். இதனால் ரத்தம் கொட்டியது. இதைப்பார்த்த குழந்தைகள் கதறி துடித்தனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
உடனே கலெக்டர் அலுவலக ஊழியர்கள், போலீசார் விரைந்து வந்து செந்திலாவை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.