ரெயில் தண்டவாளத்தில் தலை வைத்து சட்டக்கல்லூரி மாணவி தற்கொலை


ரெயில் தண்டவாளத்தில் தலை வைத்து சட்டக்கல்லூரி மாணவி தற்கொலை
x

ரெயில் தண்டவாளத்தில் தலை வைத்து சட்டக்கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் நாகல் நகரை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மகள் யஷ்வந்தினி (வயது 19). இவர் திருச்சியில் உள்ள சட்டக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

யஷ்வந்தினி நேற்று காலை வழக்கம்போல் கல்லூரி செல்வதற்காக திண்டுக்கல்லில் இருந்து திருச்சி செல்லும் பாசஞ்சர் ரெயிலில் வந்தார். வடமதுரை அருகே உள்ள தாமரைப்பாடி ரெயில் நிலையத்தில், ரெயில் நின்றபோது யஷ்வந்தினி ரெயிலை விட்டு திடீரென்று இறங்கி உள்ளார். பின்னர் யாரும் கவனிக்காத நேரத்தில் நடைமேடையில் இருந்து வேகமாக இறங்கி ரெயில் பெட்டிகளுக்கு கீழே தண்டவாளத்தில் தலையை வைத்து படுத்துள்ளார். சிறிது நேரத்தில் ரெயில் புறப்பட்டு சென்றபோது, ரெயில் சக்கரத்தில் சிக்கி யஷ்வந்தினி தலை துண்டாகி இறந்தார்.

போலீசார் விசாரணை

இதை பார்த்து நடைமேடையில் நின்ற பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். இதுகுறித்து திண்டுக்கல் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ரெயில்வே போலீசார் விரைந்து வந்து இறந்த மாணவியின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதில் மாணவி யஷ்வந்தினிக்கு வயிற்று வலி இருந்து வந்ததாகவும், இதனால் மனமுடைந்து அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. சட்டக்கல்லூரி மாணவி, ரெயில் தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story