ரெயில் தண்டவாளத்தில் தலை வைத்து சட்டக்கல்லூரி மாணவி தற்கொலை
ரெயில் தண்டவாளத்தில் தலை வைத்து சட்டக்கல்லூரி மாணவி தற்கொலை
இளம்பெண் உடல்
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள தாமரைப்பாடி ரெயில் நிலையத்துக்கு நேற்று காலை திண்டுக்கல்லில் இருந்து திருச்சி செல்லும் பாசஞ்சர் ெரயில் வந்து நின்றது. அதில் திருச்சி செல்வதற்கு பயணிகள் போட்டி போட்டு ெகாண்டு ஏறினர். பின்னர் அந்த ரெயில் அங்கிருந்து திருச்சிக்கு புறப்பட்டு சென்றது.
அதன் பின்பு ரெயில்வே ஊழியர்கள் நடைமேடையில் சென்றபோது இளம்பெண் ஒருவர் உடல், தலை துண்டான நிலையில் தண்டவாளத்தில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து திண்டுக்கல் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரெயில்வே போலீசார் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
தற்கொலை
விசாரணையில் அவர், திண்டுக்கல் நாகல் நகரை சேர்ந்த பாலமுருகன் மகள் யஷ்வந்தினி (வயது 19) என்றும், அவர், திருச்சியில் உள்ள சட்டக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்ததும் தெரியவந்தது.
மேலும் அவர், நேற்று காலை வழக்கம்போல் கல்லூரி செல்வதற்காக திண்டுக்கல்லில் இருந்து திருச்சி செல்லும் பாசஞ்சர் ரெயிலில் ஏறி சென்றுள்ளார். தாமரைப்பாடியில் ரெயில் நின்றபோது யஷ்வந்தினி ரெயிலை விட்டு திடீரென்று இறங்கி உள்ளார். பின்பு தற்கொலை செய்து கொள்வதற்காக ரெயில் பெட்டிகளுக்கு இடையே தண்டவாளத்தில் தலையை வைத்து படுத்துள்ளார். அதில் ரெயில் சக்கரத்தில் அவர் தலை துண்டாகி இறந்து இருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
போலீசார் விசாரணை
பின்பு இறந்த மாணவியின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தினர்.
அதில் மாணவி யஷ்வந்தினிக்கு வயிற்று வலி இருந்து வந்ததாகவும், அதில் மனமுடைந்து அவர் தற்கொலை செய்து ெகாண்டதாகவும் கூறப்படுகிறது.
சட்டக்கல்லூரி மாணவி, ரெயில் தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.