வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை


வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை
x

குன்னூர் அருகே வீட்டுக்குள் புகுந்த சிறுத்தையால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

நீலகிரி

குன்னூர்,

குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சமீப நாட்களாக சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து உள்ளது. குறிப்பாக வனப்பகுதிகளில் இருந்து தண்ணீர், உணவு தேடி தேயிலை தோட்டங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து வருகின்றன. சில நேரங்களில் சிறுத்தை, வளர்ப்பு நாய்களை கவ்வி செல்கிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு குன்னூர் அம்பிகாபுரம் பகுதியில் வெள்ளியங்கிரி என்பவரது வீட்டு வளாகத்துக்குள் சிறுத்தை புகுந்தது. பின்னர் அங்குள்ள வளர்ப்பு நாய்களை தாக்கி இழுத்து செல்ல முயற்சித்தது. ஆனால், அவை பாதுகாப்பாக அடைத்து வைக்கப்பட்டு இருந்தன. இதனால் சிறுத்தையால் நாய்களை தாக்க முடியவில்லை. பின்னர் சிறுத்தை அங்கிருந்து சென்றது. அப்பகுதியில் வீட்டின் சுவர் மீது சிறுத்தை நின்ற காட்சி, அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. வீட்டுக்குள் புகுந்த சிறுத்தையால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.



Next Story