முதல்-அமைச்சருக்கு பா.ம.க.வினர் கடிதம்
வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு கோரி முதல்-அமைச்சருக்கு பா.ம.க.வினர் கடிதம் அனுப்பினர்.
திருவண்ணாமலை
ஆரணி
ஆரணி தச்சூர் சாலையில் உள்ள தலைமை தபால் நிலையத்தின் முன்பு தபால் பெட்டியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி முதல்-அமைச்சருக்கு கடிதம் அனுப்பினர்.
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் ஆ.வேலாயுதம் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் நீதிபதியும், பிற்படுத்தப்பட்ட நல வாரிய ஆணையாளருக்கும் கடிதங்களை தபால் பெட்டியில் போட்டனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் வடிவேலு மற்றும் ஆரணி நகர செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story