சங்ககிரி அருகே தறிப்பட்டறை உரிமையாளர் கார் மோதி சாவு
சங்ககிரி அருகே தறிப்பட்டறை உரிமையாளர் கார் மோதி இறந்தார்.
சேலம்
சங்ககிரி:
சங்ககிரி அருகே தேவண்ணக்கவுண்டனூர் கிராமம், கொல்லக்காடு பகுதியை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 27). தறிப்பட்டறை உரிமையாளர். இவர் நேற்று முன்தினம் இரவு தனது மொபட்டில் சங்ககிரி கெமிக்கல் பிரிவு பகுதிக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் ரோட்டில் தினேஷ்குமார் வந்த போது, சேலம் நோக்கி சென்ற கார், மொபட் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த தினேஷ்குமார், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சங்ககிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுதாகரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story