பாய்லர் ஏற்றி சென்ற லாரி மின்கம்பியில் உரசி சாலையில் நின்றதால் போக்குவரத்து பாதிப்பு

பாய்லர் ஏற்றி சென்ற லாரி மின்கம்பியில் உரசி சாலையில் நின்றதால் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 2 Jun 2023 12:15 AM IST (Updated: 2 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழி அருகே பாய்லர் ஏற்றி சென்ற லாரி மின்கம்பியில் உரசி சாலையின் குறுக்கே நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் சுமார் 2 மணி நேரம் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருந்தன.

மயிலாடுதுறை

திருவெண்காடு:

சீர்காழி அருகே பாய்லர் ஏற்றி சென்ற லாரி மின்கம்பியில் உரசி சாலையின் குறுக்கே நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் சுமார் 2 மணி நேரம் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருந்தன.

சென்னை- நாகை சாலை

சென்னையில் இருந்து காரைக்கால் நோக்கி பாய்லரை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்றது. இந்த லாரி சீர்காழி அருகே சூறைக்காடு பகுதியில் செல்லும்போது சாலையின் குறுக்கே இருந்த மின் கம்பியில் சிக்கியது. இதனால் அந்த லாரி அங்கேயே சாலையின் நடுவே நிறுத்தப்பட்டது.

இதன் காரணமாக அந்த வழியாக சென்ற வாகனங்கள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், சென்னை- நாகை தேசிய நெடுஞ்சாலையில் இந்த பகுதி உள்ளது.

மின்கம்பியில் உரசியது

அதனால் இந்த பகுதி சாலையில் மின்கம்பியில் உரசி பாய்லர் ஏற்றி சென்ற லாரி சாலையின் நடுவே நின்றதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி போக்குவரத்து போலீசார், மற்றும் மின்வாரிய ஊழியர்கள் விரைந்து வந்து மேற்கண்ட பகுதியில் உள்ள மின்சார வயர்களை சரி செய்தனர். பின்னர் போக்குவரத்து போலீசார் அந்த பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர். இதனால் இந்த சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

Next Story